Friday 5 September 2014

Painted Stork பூநாரை

Painted Stork பூநாரை  

Painted Stork 
பூநாரை அல்லது வர்ண நாரை - வண்டலூர் பூங்காவில்  எடுத்த படம்.

White Tiger வெள்ளை புலிகள்

White Tiger
வெள்ளை புலிகள் 

இந்த வெள்ளை புலிகள் புகைப்படம் வண்டலூர் விலங்கியல் பூங்காவில் நான் எடுத்தது.
வெள்ளை புலி ( White Tiger) :
       வெள்ளைப் புலிகள் என்று ஒரு இனம் இல்லை. மரபணு மாற்றத்தால் ஏற்பட்ட வண்ண வேறுபாடே வெள்ளைப்புலிகள் உருவானதற்கான காரணம் என அறியப்படுகிறது. வெள்ளைப் புலிகள் என்பது வங்கப் புலிகளின் மரபணு மாற்றத்தால் ஏற்பட்ட புலிகளே ஆகும். காடுகளில் பொதுவாக வெள்ளைப் புலிகள் இல்லை. அரிதாக வங்கப் புலிகள் மட்டும் காடுகளில் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள். அதனால் தான் வங்கப் புலி இனங்களில் மட்டும் தான் வெள்ளைப் புலிகள் இருக்கின்றன. 
          விலங்கியல்  பூங்காக்களில் மட்டுமே மக்களைக் கவரும் வகையில் அதன் பிரபலத்திற்காக இனப்பெருக்கம் செய்யப்பட்டு இதன் எண்ணிக்கை உயர்த்தப்படுகிறது. மேலும் மற்ற  விலங்கியல்  பூங்காக்களுக்கும் அனுப்பப்படுகிறது. ஆனால் இவ்வாறு இனப்பெருக்கம் செய்யப்படும் வெள்ளைப் புலிகள் பொதுவாக சில குறைபாடுகளுடன் பிறப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. அதாவது, மாறுகண் மற்றும் தட்டையான தாடை போன்ற குறைபாடுகள் ஏற்படுகிறது. மேலும் ஊதா நிற கண்கள், இளஞ்சிவப்பு நிற மூக்கு போன்ற மாறுபாடுகளும் ஏற்படுகிறது. வெள்ளைப் புலிகளின் ஆயுள் காலமும் மற்ற புலிகளை விட குறைவுதான். 

                                    இந்த வெள்ளை புலிகள் புகைப்படம் வண்டலூர் விலங்கியல் பூங்காவில் நான் எடுத்தது.


White Tigers - Vandalur Zoological Park took this photo .