Saturday 31 January 2015

பனை மரங்கள் காக்க சட்டம் வேண்டும்!

பனை மரங்கள் காக்க சட்டம் வேண்டும்!

தமிழ்நாட்டின் தேசிய மரம் பனை. இந்தியாவில் உள்ள மொத்த பனைமரங்களில் 40% தமிழ்நாட்டில் இருந்தது. இப்போது ...
இன்று என்னுடன் பணீபுரியும் சகோ.பாஸ்கரிடம் பனை மரங்களை பற்றி பேசிக்கொண்டிருந்த போது அதிர்சியுட்டும் செய்தி ஒன்றை சொன்னார் அவர் ரியல் எஸ்டேட் தொழிலும் பகுதி நேரமாக செய்து வருகிறார். சமீபத்தில் அவர் விற்றுக் கொடுத்த இடத்தில் 100 பனை மரங்கள் இருந்ததாம். வாங்குபவர்கள் மரங்களை வெட்டச் சொல்லிவிட்டதால் இடத்தின் உரிமையாளர் 100 பனை மரங்களையும் வெட்டிவிட்டாராம். இது நடந்தது படப்பைக்கு அல்லது கூடுவாஞ்சேரிக்கு அருகிலுள்ள ஒரத்தூரில்...

இப்படி தமிழகத்தின் பல ஊர்களில் மரங்கள் வெட்டப்படுவது சர்வசாதரணமாகிவிட்டது. ஒரு புறம் சாலை விரிவாக்கத்திற்காக வெட்டுகிறார்கள். மறுபுறமும் ரியல்எஸ்டேட்காரர்கள் வெட்டுகிறார்கள். ஏன் அரசு இதை தடுக்க சட்டம் கொண்டுவரக்கூடாது.

பனை மரங்களை மட்டுமல்ல புளியமரங்கள், இன்ன பிற மரங்களையும் வெட்டி இடங்களை விற்கின்றனர். அதற்கு பின்னர் பல ஆண்டுகளாக அந்த இடங்கள் வெற்று நிலமாகவே இருக்கிறது. இதனால் சுற்றுப்புறச்சூழல் தான் பாதிக்கப்படுகிறது. இதற்கு காரணத்தைச் சொல்லும் ரியல் எஸ்டேட்காரர்கள்,''மரங்களை வெட்டினால் தான் மனைபிரிவுகள் அமைக்க அனுமதி கிடைக்கிறது" என்கிறார்கள். அப்படியானால் வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என அரசு ஏன் கூவுகிறது? வனத்துறையினர் சட்டங்களை எளிமைப்படுத்தவேண்டும். அதாவது, ஒரு இடத்தில் அவர்கள் வீடு கட்டும் வரை அதிலுள்ள மரங்களை வெட்டக்கூடாது என சட்டம் இயற்ற வேண்டும். அதனால் மரங்கள் பாதுகாக்கப்படும்.

அரசு அவசரமாக இந்த சூழலைப் புரிந்து கொண்டு சட்டமியற்றி தேவையில்லாமல் மரங்கள் வெட்ப்படுவதை தடுக்க வேண்டும். அதே போல் பனை வாரியத்தை சீரமைத்து பனைத்தொழிலை ஊக்குவிப்பதன் மூலம் பனை மரங்களை அதிகம் உருவாக்கலாம். பனையின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனையை அதிகப்படுத்தலாம்.

Saturday 10 January 2015