Friday 19 December 2014

எலிகளை விரட்டும் ஊமத்தங்காய்

எலிகளை விரட்டும் ஊமத்தங்காய்!

வயல் மற்றும் தோட்டங்களில் நுழையும் எலிகளை விரட்ட விசத்தை வைத்து அதை விரட்டுகிறோம். இதன் மூலம் எலி அழிக்கப்பட்டாலும் அதன் விசம் வினைபொருள்களிலும் பரவிட வாய்ப்புண்டு என்பதை நாம் மறுக்க முடியாது. இதற்கு என்ன தான் வழி? 
இதோ விசம் வைக்காமல் துரத்த இயற்கையான முறையில் ஒரு வழி புதர்களிலும், வேலி ஓரங்களிலும் சிறு பந்து அளவிற்கு பச்சை நிறத்தில் ஊமத்தங்காய்கள் கிடக்கும் அதில் வெள்ளை வரி ஓடும் ஊமத்தங்காய் ஒரு வகை. அதன் பெயர் வரிஊமத்தங்காய் இது கடுமையான கசப்புத்தன்மை உடையது. 
இந்த காய்களை பறித்து அதை இரண்டாக வெட்டி அதில் எலிக்கு பிடித்தமான உணவை வைத்து அதை எலி வரும் இடங்களில் வைத்து விட்டால் போதும் எலி ஆசையாக வந்து அதை சாப்பிடும் அதன் பிறகு அதன் கசப்புத்தன்மையை தாங்க முடியாமல் நாள் முழுவதும் அலைந்து ஓய்ந்து ஓடும் அதன் பின் அந்த தோட்டத்தின் பக்கமே வராது. பயன்படுத்தி தான் பாருங்களேன்.