Thursday 11 August 2016

தேன் பழம் - சிங்கப்பூர் செர்ரி (Muntingia calabura)

தேன் பழம் அல்லது நெய் பழம் என்று அழைக்கப்படுகின்ற இந்தப்பழம் செர்ரிப் பழ வகையைச் சார்ந்தது.

இது சிங்கப்பூர் செர்ரி, ஜமைக்கா செர்ரி, பனாமா செர்ரி என்றும் அழைக்கப்படுகிறது. மர வகையைச் சார்ந்த இந்த தாவரத்தின் தாவரவியல் பெயர் முட்டிங்கியா காலபுரா (Muntingia calabura) . Bird's cherry என்றும் அழைக்கப்படுகிறது.


    Muntingia calabura தேன் பழம் 


இதில் விட்டமின் சி, பி மற்றும் தாதுக்கள் இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் பீட்டா கரோட்டீன் சத்துக்களும் அடங்கியுள்ளது.

தலைவலி, சளி, ப்ளு காய்ச்சல் போன்ற நோய்களை குணப்படுத்தக்கூடியது. மேலும் குறைந்த சர்க்கரை மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் போன்றவற்றையும் குணப்படுத்தவல்லது. இதன் இலைகளை தேநீராக சில மேலை நாடுகளில் அருந்துகின்றனர்.

 
Muntingia calabura தேன் பழ காய் 


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. அத்லெட்டிக் விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த உற்சாகத்தையும், சக்தியையும் அளிக்கவல்லது.
                                                                                                                   - மலைநாடன் ஆசாத்